கொள்ளையர்களிடம் துணிச்சலாக சண்டையிட்ட 84 வயது முதியவர்: வைரல் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

அயர்லாந்தில் வங்கியை கொள்ளையடிக்க துப்பாக்கியுடன் புகுந்த 3 முகமூடி நபர்களை 84 வயது முதியவர் அடித்து விரட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அயர்லாந்தில் உள்ள கடை ஒன்றில் மர்ம நபர்கள் 3 பேர் திடீரென ஒரு துப்பாக்கி மற்றும் இரண்டு சுத்தியலுடன் உள்ளே புகுந்தனர்.

முகமூடி அணிந்திருந்த அந்த நபர்களை பார்த்ததும், உள்ளிருந்த அனைவரும் அச்சமடைந்த சத்தமிட்டுள்ளனர்.

இதற்கிடையில் கடையில் உள்ளிருந்த Denis O’Connor என்ற 54 வயது முதியவர்,மர் நபர்கள் 3 பேரையும் கடுமையாக தாக்க ஆரம்பிக்கிறார்.

இதனால் பயந்துபோன அந்த கொள்ளையர்கள் உடனடியாக கடையை விட்டு தலை தெறித்து ஓடுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில், Denis ஒரு ஹீரோ. அந்த நபர்கள் அனைவரும் கோழை என கத்திகொண்டே அவர்களை கடுமையாக தாக்கினார். அவரால் நான் முற்றிலும் ஈர்க்கப்பட்டுவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...