பயங்கர சூறாவளிக்கு நடுவில் இரண்டு குழந்தைகளின் தந்தை செய்த மோசமான செயல்: வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஹாங்காங்கை Mangkut சூறாவளி புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் இரண்டு குழந்தைகளின் தந்தையான ஒரு நபர் சற்றும் பொறுப்பின்றி தன் குழந்தைகளை போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் செய்த வீடியோ வெளியாகி கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிக்கு 140 மைல் வேகத்தில் காற்று அடிக்க, மழை கொட்டோ கொட்டென்று கொட்ட, Kennedy Town என்னும் பகுதியில் அந்த தந்தை சூறாவளிக்கு நடுவில் தனது பிள்ளைகள் இருவரையும் அருகருகே நிற்கச் செய்து போஸ் கொடுக்கச் சொல்கிறார்.

அந்த குழந்தைகளும் தந்தையின் சொல் கேட்டு மழைக்குள் நின்று போஸ் கொடுக்கிறார்கள்.

ஏற்கனவே அந்த சூறாவளி பிலிப்பைன்சில் பலரின் உயிரைப் பறித்த பின் தென் சீனாவுக்குள் நுழைந்து கோர தாண்டவம் ஆடியுள்ளது.

அந்த வீடியோவை எடுத்தவர் அந்த அதிர்ச்சியான காட்சியைக் கண்டு இப்படி ஒரு தந்தை செய்வாரா என ஆச்சரியப்பட்டுப் போனதாக தெரிவித்துள்ளார்.

ஹாங்காங், சூறாவளியால் மோசமாக தாக்கப்பட்டதோடு சுமார் 300 பேர் காயமடைந்துள்ளார்கள். அரசு மிகவும் மோசமான மற்றும் தீவிர சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers