341 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக டிவி நேரலையில் சொன்ன கணவன்: அதிர்ச்சியில் மனைவி செய்த செயல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கணவர் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறியதையடுத்து மனைவி கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறினார்.

Iyanla: Fix My Life என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை பெண் தொகுப்பாளினி தொகுத்து வழங்கிய நிலையில் ஜேசன் மேக்சில் என்பவர் தனது மனைவி பிரண்டியுடன் அதில் கலந்து கொண்டிருந்தார்.

தங்களது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பேசி கொண்டிருக்கும் போது ஜேசன் தான் இதுவரை வாழ்நாளில் 341 பெண்களுடன் உல்லாசமாக இருந்தேன் என கூறினார்.

மேலும் பிரண்டியுடன் திருமணமான நேரத்தில் 50 பெண்களுடன் ஜாலியாக இருந்ததாக கூறினார்.

இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியடைந்த பிரண்டி அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறினார். அவரை தொகுப்பாளினி தடுக்க முயன்றும் அதை பொருட்படுத்தாமல் வெளியேறினார்.

இதனிடையில் இந்த விடயத்தால் பாதிக்கப்பட்ட பிரண்டி தனது கணவரை இன்னும் பிரியவில்லை.

ஜேசனுடன் தனது ஒன்பதாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய பிரண்டி அது குறித்து மகிழ்ச்சியாக சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers