தேனிலவின் போது மில்லியன் கணக்கான இதயங்களை கவர்ந்த இளம் மனைவி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
தேனிலவின் போது மில்லியன் கணக்கான இதயங்களை கவர்ந்த இளம் மனைவி
306Shares
306Shares
lankasrimarket.com

சீனாவில் தேனிலவுக்கு சென்றபோது இளம் மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய 4 உயிர்களை காப்பாற்றி மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளார்.

26 வயதான Zhou Wei - க்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது. Shimen County Red Cross மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் இவர் தனது கணவருடன் தேனிலவு செல்வதற்காக Qinghai பகுதியில் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது, இவரது கண் எதிரிலேயே இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது,

கொளுந்துவிட்டு எரிந்த அந்த காரில் பயணித்த 8 பேரும் உயிருக்கு போராடினர். இதனைப்பார்த்த இந்த செவிலியர், விரைவாக ஓடிச்சென்று ஒரு காரில் இருந்த நான்கு பேரை வெளியில் மீட்டெடுத்து முதலுதவி அளித்துள்ளார்.

உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், இதில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து, செவிலியரின் செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

மில்லியன் கணக்கான இதயங்களை செவிலியர் கவர்ந்துள்ளார். இவரது கணவர், எனது மனைவி மிகவும் தைரியமானவர், அழகானவர் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்