திடீரென காணாமல் போன பிரபல நடிகை: தலைமறைவின் பின்னணி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சீனாவின் பிரபல நடிகையும் சில ஹாலிவுட் படங்களில் நடித்தவருமான Fan Bingbing திடீரென காணாமல் போயிருக்கிறார்.

நடிகர்கள் தங்கள் வருமானத்தை சரியாக தெரிவிப்பதில்லை என்ற புகார் எழுந்ததையடுத்து, ஜூன் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கினார்கள்.

சமூக ஊடகங்களில் 63 மில்லியன் பின் தொடர்வோரைக் கொண்ட Bingbing, அதற்குப்பின் சமூக ஊடகங்களிலிருந்தும், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கண்களிலிருந்தும் காணாமல் போனார்.

அதன்பிறகு அவரைக் குறித்த செய்திகளோ பாப்பராசி புகைப்படங்களோ வெளியாகவில்லை.

தன் மீதான குற்றச்சாட்டுகளை Bingbing மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் அவர் சம்பந்தப்பட்ட யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

ஜூன் 3ஆம் திகதி Bingbingஇன் வருமான வரி தொடர்பாக விசாரணை நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வந்ததும் அவர் தலைமறைவானது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...