மக்கள் கூட்டத்தினுள் காரை செலுத்திய நபர்: 9 பேர் பலியான பரிதாபம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சீனாவில் மக்கள் கூட்டத்தினுள் கார் புகுந்த சம்பவத்தில் 9 பேர் பலியாகியுள்ளதுடன், 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் நேற்றைய தினம், மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் கார் ஒன்று வேகமாக வந்து கூட்டத்தின் மீது மோதியது.

இந்த எதிர்பாராத தாக்குதலில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 46 பேர் படுகாயம் அடைந்தனர். அதன் பின்னர், அங்கிருந்த பொலிசார் உடனடியாக காரை ஓட்டிய நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் பொலிசார் நடத்திய விசாரணையில், தாக்குதலை நடத்திய நபரின் பெயர் யாங் ஜான்யுன்(54) என்பதும், அவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஏற்கனவே பலமுறை சிறைக்கு சென்றவர் என்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில், பொலிசார் ஜான்யுனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளில் குற்றச்செயல்கள் அங்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers