காதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி மிரட்டிய காதலன்! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சிங்கப்பூரில் திருடப்பட்ட ஏடிஎம் கார்டைப் பற்றி கூறினால், காதலியின் வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டிய நபருக்கு 18 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் Thomas Chua Poh Heng(40). இவர் தொடர்பான வழக்கு கடந்த செவ்வாய் கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு 18 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு குறித்து ஊள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவரின் காதலி அங்கிருக்கும் Vista Point Shopping Centre-ல் ஏடிஎம் கார்டு ஒன்றை கண்டுள்ளார்.

அதன் பின் அதை எடுத்துக் கொண்டு, காதலனிடம் இது கீழே கிடந்துள்ளது, பொலிசாரிடம் கொடுத்துவிடலாம் என்று கூறியுள்ளார்.

ஆனால் அவரோ அது எல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று கூறி, அந்த கார்டை பயன்படுத்தி பப் போன்ற இடங்களுக்கு சென்று வந்துள்ளார். அப்போது உடன் காதலி இருந்தாரா என்பது தெரியவில்லை.

அன்றைய மறுநாள் காதலிக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இவரும், காதலியும் ஒன்றாக இருந்துள்ளனர்.

இந்த ஏடிஎம் கார்டைப் பற்றி யாரிடமும் கூறினால், இந்த வீடியோவை ஆபாசதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதைக் கண்டவுடன் அவரின் காதலி உடனடியாக பொலிசில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜுன் மாதம் Mustafa Centre-ல் 100 மி.லி வாசனை திரவியம் பாட்டில் திருடியதற்காக அங்கிருக்கும் பாதுகாவலர்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின் டிசம்பர் மாதம் 2017-ஆம் ஆண்டு டிராபிக் பொலிசார் இறந்து கிடந்த புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இப்படி இந்த நபர் மீது 8 வழக்குகள் இருந்துள்ளன. இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, அந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவருக்கு 18 மாதங்களே சிறை தண்டனையே கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers