தாயின் கண்முன்னே 3 வயது சிறுவனின் மீது ஏறிய கார்: அதிர்ச்சி வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் தாயின் கண்முண்ணே மகன் மீது கார் ஏறி இறங்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சீனாவின் Yinchuan நகர பகுதியில் கடந்த செப்டம்பர் 4-ம் தேதியன்று, தன்னுடைய மகனை தாய் ஒருவர் பள்ளியிலிருந்து அழைத்து வந்துள்ளார்.

அப்போது மகனை கவனிக்காமல் தாய் முன்னதாக சென்றுள்ளார். அவருக்கு பின்னாடி சென்றுகொண்டிருந்த சிறுவன் அப்படியே சாலையில் அமர்ந்து விடுகிறான்.

அவனை திரும்பி பார்த்துக்கொண்டிருக்கும் போது, திடீரென வேகமாக வந்த கார் சிறுவனின் மீது ஏறி இறங்கி விடுகிறது. இதை பார்த்து பதறிப்போன தாய் வேகமாக ஓடிச்சென்று மகனை தூக்குகிறார்.

இந்த சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு பணியக அதிகாரி ஒருவர் கூறுகையில், விபத்து ஏற்பட்டபொழுது சிறுவனின் முதுகு பகுதியில் பை மாட்டப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிதப்பியுள்ளார்.

இந்த விபத்தில் சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. விபத்து நடந்த உடனே, அந்த வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுநர் உடனடியாக சிறுவனையும், அவனுடைய அம்மாவையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers