நாற்பது வயதில் இருபது வயதுப் பெண் போல் தோற்றமளிக்கும் தைவான் பெண்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

நாற்பது வயதில் இருபது வயதுப் பெண் போல் தோற்றமளிக்கும் தைவான் பெண் தனது அழகின் ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆடை வடிவமைப்பாளரான Lure Hsu (43) ஒரு முறை தனது இளைய தங்கையுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, அதற்குப்பின் அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே கூடியது.

அவரது அழகுக்கும் இளமைக்கும் பாரம்பரியம் ஒரு காரணமாக இருந்தாலும் சில கடுமையான உணவுப் பழக்கங்களும் தோல் பராமரிப்பும் கூட ஒரு காரணம் என்கிறார் அவர்.

எப்போதும் மாய்சரைஸர் பயன்படுத்துவது நல்ல பலன் தரும் என்று கூறும் Lure Hsu, சில குறிப்பிட்ட நிறுவனங்களின் அழகு பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறார்.

சூரியன் தோலில் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம் என்று கூறும் அவர் சன்ஸ்கிரீன் போடாமல் வெளியே கால் எடுத்து வைப்பதில்லை.

அத்துடன் தவறாமல் வைட்டமின் Cயும் கொலாஜனும் எடுத்துக் கொள்வதாகத் தெரிவிக்கிறார் அவர்.

மாமிச உணவைத் தவிக்கும் அவர், சர்க்கரை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து பழங்களையே உண்ணுகிறார்.

தினமும் சுறுசுறுப்பாக இருப்பதும் தனது இளமையின் ரகசியங்களில் ஒன்று என்கிறார் இந்த 43 வயது இளம்பெண்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்