துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமியின் வழக்கில் சிக்கிய வீடியோ: வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஸ்யாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 14 வயது சிறுமியின் வழக்கு தொடர்பாக, வீடியோ வெளியானதை அடுத்து குற்றவாளியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரஸ்யாவின் மாஸ்கோ நகரத்தில் உள்ள ஒரு அபார்ட்மெண்டிற்கு வெளியில் 14 வயது சிறுமியின் உடல் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், சிறுமி அரக்கத்தனமான முறையில் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாலே மூச்சு திணறி இறந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.

வீடியோவை காண...

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிரமான விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, Vladislav Kanshin (43) என்ற நபர் சிறுமியின் உடலை தூக்கிக்கொண்டு செல்லும் காட்சி இடம் பெற்றிருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார், குற்றவாளியை கைது செய்து, அவனுடைய அறையில் சோதனை நடத்தினர். அங்கு பாலியல் பொம்மைகள், கயிறு மற்றும் ரத்தம் படிந்த படுக்கை விரிப்புகள் போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர். மேலும் வேறு ஒருவருடைய பாஸ்போட்டில் தன்னுடைய புகைப்படத்தை ஒட்டியிருந்ததையும் பொலிஸார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து சம்பவம் குறித்து குற்றவாளியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், Maria Kalugina (14) அவரது அம்மாவிற்கு தெரிந்து தான் என்னுடைய அறைக்கு வந்தார். நாங்கள் இருவரும் என்னுடைய அறையில் அதிகமான முறை தங்கியிருக்கிறோம். அவளுடைய விருப்பத்தின்பேரில் தான் நாங்கள் இருவருமே உறவு கொண்டோம்.

அன்றைய தினம் கயிறு போன்றவற்றை பயன்படுத்தி உறவு கொள்ளும்போது திடீரென அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே மருந்து வாங்க கடைக்கு சென்றுவிட்டு திரும்பினேன். ஆனால் திரும்பி வரும்போது அவள் மூச்சின்றி இறந்துகிடந்தாள் என வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்