துப்பாக்கி சூட்டில் குழந்தைகளை காப்பாற்றிய இளைஞர்கள்: அதிர்ச்சி வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மெக்ஸிகோவில் கடை ஒன்றில் மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டபோது, அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் துணிந்து செயல்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மெக்ஸிகோவின் Espanola பகுதியில் உள்ள கடை ஒன்றின் வெளிப்பகுதியில் மர்ம நபர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு சண்டையிட்டுள்ளனர்.

அப்பொழுது திடீரென ஒரு தோட்டா கடையின் கதவின் மீது பட்டுள்ளது. இதனையடுத்து கடையில் இருந்த அனைவரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

இதற்கிடையில் இளைஞர் ஒருவர் வேகமாக செயல்பட்டு, அருகில் இருந்த பெண்ணை தரையில் தள்ளிவிட்டு, தன்னுடைய உடலை கேடயமாக்கி, அவரை காப்பாற்றியுள்ளார். அதேசமயம் மற்றொருபுறம், ஒருவர் அங்கிருந்த இரண்டு குழந்தைகளை தன்னுடைய கைகளால் வேகமாக அணைத்துக்கொண்டு காப்பாற்றுகிறார்.

இதுதொடர்பான வீடியோ காட்சியினை தங்களுடைய அதிகாரபூர்வமான முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள மெக்ஸிகோ பொலிஸார், இரண்டு குழந்தைகள் மற்றும் பெண்ணை காப்பாற்றிய இரண்டு ஆண்களுக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்