பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் அகதி பெண்கள்: அதிர்ச்சி தகவல்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

வங்கதேசத்தில் அமைந்திருக்கும் உலகின் மிகப்பெரிய அகதி முகாம்களாக பார்க்கப்படும் ரோஹிங்கியா அகதி முகாம்களில் உள்ள மக்கள் ஆட்கடத்தல், பாலியல் உள்ளிட்ட சுரண்டலில் சிக்கும் அவலம் வளரத்தொடங்கியுள்ளது.

இந்த நெருக்கடியில் சிக்கியுள்ள பெண்கள் போலியான வேலைகளில் சிக்கி பாலியல் தொழிலில் தள்ளப்படுவதாக ஐநா வேதனை தெரிவித்துள்ளது.

56 சதவீதத்திற்கும் மேல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆட்கடத்தலுக்கு இலக்காகியுள்ளனர். மேலும், பாலியல் தொழிலுக்கு பெண்கள் கடத்த்ப்படுகிறார்கள் என அவசரகால உதவி திட்டத்தின் மேலாளர் டாம் பெட்ஸ்கோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட்ஸ் 17 இல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளை தொடர்ந்து சுமார் 7 லட்சும் ரோஹிங்கியா அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர்.

அந்த தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இது ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு எதிரான இன அழிப்பு என்று இஸ்லாமிய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. மியான்மரில் நடக்கும் தாக்குதல்களால் இதுவரை லட்சக்கணக்கான ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் அகதிகளாக வங்கதேசம் மற்றும் இந்தியாவுக்கு சென்றுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்