அறையில் தனியாக இருந்த சுற்றுலா பயணியை பலாத்காரம் செய்த பொலிசார்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இத்தாலியில் இளைஞர்கள் இருவரால் ஜேர்மன் சுற்றுலா பயணி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் ரிமினி பகுதியில் 19 வயது ஜேர்மன் சுற்றுலா பயணி தமது நண்பர்களுடன் ஹொட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

சம்பவத்தன்று இவரது நண்பர்கள் நகரை சுற்றுப்பார்க்க சென்ற நிலையில் குறித்த 19 வயது இளம்பெண் மட்டுமே அறையில் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் அதே ஹொட்டலில் தங்கியிருந்த இரண்டு இத்தாலிய பொலிஸ் மாணவர்கள் குறித்த ஜேர்மன் சுற்றுலா பயணியை பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார், தொடர்புடைய இரு மாணவர்களையும் பாடசாலையில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர்.

இதனிடையே குறித்த ஜேர்மன் சுற்றுலா பயணியின் சம்மதத்துடனே பாலியல் உறவு கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தம்மை அவர்கள் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளதாக குறித்த ஜேர்மன் இளம்பெண் விசாரணை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.

ரிமினி நகரில் ஓராண்டுக்கு முன்னர் போலந்து நாட்டவர் மற்றும் திருநங்கை பாலியல் தொழிலாளி ஆகிய இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்டவர் வெளிநாட்டு சுற்றுலா பயணி என தெரியவந்தது. இது இத்தாலிய அரசியலிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்