இந்த பெண்மணி செய்யும் வேடிக்கையைப் பாருங்கள்: வயிறு வலிக்க சிரிப்பீர்கள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சீன சுற்றுலாப்பயணி ஒருவர் bungee jump எனப்படும் சாகச விளையாட்டில் பங்கேற்பதற்காக நியூஸிலாந்து சென்றிருந்த நிலையில் jump என்ற வார்த்தையின்

பொருள் தெரியாததால் செய்த வேடிக்கையை பார்ப்பவர்கள் வயிறு குலுங்கச் சிரிக்காமல் இருக்க முடியாது.

Kawarau Gorge Suspension பாலத்தில் குதிப்பதற்கு தயாராக நின்ற அந்த பெண் கெமராவைப் பார்த்ததும் உற்சாகமாக கையசைக்கிறார்.

நாங்கள் சொன்னதும் குதிக்க வேண்டும் சரியா என்று கேட்டு அந்த விளையாட்டை செய்ய உதவுபவர்கள் jump என்று கத்த அந்த பெண்மணி குதிக்காமல் அப்படியே நிற்கிறார்.

பின்னர் அடுத்த முறையும் மற்றவர்கள் குரல் எழுப்பி அவரை உற்சாகப்படுத்த, அவரும் உற்சாகக் குரல் எழுப்புகிறார், ஆனாலும் குதிக்கவில்லை. பின்னர்தான் மற்றவர்களுக்கு புரிந்தது, அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதும், jump என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாது என்பதும்.

கடைசியாக அவரது வழிகாட்டிகள் சைகை மூலம் அவருக்கு முன்னோக்கி குதிக்க வேண்டும் என்பது போல் செய்து காட்ட அவர் குதித்தாரா அல்லது அவரை தள்ளிவிட்டார்களா என்பது புரியாத புதிர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்