சுற்றுலாப்பயணிகள் கண் முன்னே ஸ்பெயினுக்குள் நுழைந்த அகதிகள்: பரபரப்பு வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் கடற்கரை ஒன்றில் வந்திறங்கிய சுமார் 50 அகதிகள் நாட்டிற்குள் நுழையும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினிலுள்ள Barrosa கடற்கரையில் இந்த சம்பவம் நடந்தேறியது.

அந்த வீடியோவில் சுற்றுலாப்பயணிகள் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, வந்த படகு ஒன்றிலிருந்து சுமார் 50 அகதிகள் தண்ணீரில் குதித்து ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.

நேற்று மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது.

இதற்கிடையில் 25 பேர் தங்களிடம் சிக்கியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்களில் 19 பேர் சிறுவர்கள், அவர்கள் அனைவருமே மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர்.

சிக்கியவர்களில் பெரியவர்கள் யாரும் எந்த குற்ற செயலிலும் ஈடுபடாதவர்கள் என்பதால் அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

அதேபோல் சிறுவர்களும் பாதுகாப்பான இளைஞர் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் தப்பியோடியவர்களை தேடும் பணியும் தொடர்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்