சிலை போல வேடிக்கை காட்டிய இளம்பெண்... பொதுமக்கள் மீது சரிந்த விழுந்த சாரம்! அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் சிலை போல நின்று இளம்பெண் ஒருவர் வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கும்போது, சாரம் ஒன்று சரிந்த விழுந்ததில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

ரஷ்யாவின் Saint Petersburg பகுதியில், Diana Savenkova என்ற 15 அவரது பள்ளி மாணவி சிலை போல அலங்கரித்து பொதுமக்களுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார். இதனை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பலரும் நின்று கண்டுகளித்தனர்.

அப்போது திடீரென சுவர் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த சாளரம் சரிந்து விழுந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் சிக்கி கூச்சலிட ஆரம்பித்தனர்.

இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுக்கப்பட்டதோடு, விபத்தில் சிக்கிய பொதுமக்களையும் மீட்கும் பணியில் அங்கிருந்தவர்கள் ஈடுபட ஆரம்பித்தனர்.

இந்த விபத்தில் Diana-வின் முதுகெலும்பு முறிந்துவிட்டதாக அவருடைய அம்மா Lyudmila கூறியுள்ளார்.

மேலும், அவசர சிகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மகளின் சிகிச்சைக்கு யாரேனும் உதவுமாறும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விபத்தினை நேரில் பார்த்த பொதுமக்கள் சிலர் கூறுகையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் விபத்து ஏற்பட்டது. ஆம்புலன்சில் ஏற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு லேசான காயங்கள் தான் ஏற்பட்டது.

ஆனால் ஒரு சிலர் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். அதிலும் ஒரு பெண் சுயநினைவிழந்து மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...