இறந்துபோனவரை சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்ட பெண்: கண்கலங்க வைக்கும் பின்னணி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் 50 ஆண்டுகள் உயிருக்கு உயிராக நேசித்த தோழி இறந்த நிலையில் அவரை பெண்ணொருவர் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Utah மாகாணத்தின் Salt Lake நகரை சேர்ந்தவர் போனி போரிஸ்டர் (74). இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவரை பிரிந்த நிலையில் பிவர்லி கிரோசைண்ட் என்ற பெண் போனிக்கு தோழியாகியுள்ளார்.

இதையடுத்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்து கொண்டு அன்பாக இணைந்து வாழ்ந்தார்கள்.

இந்நிலையில் கடந்த மே மாதம் பிவர்லி உயிரிழந்துள்ளார்.

இதன்பின்னர் போனி நெகிழ்ச்சியான முடிவை எடுத்தார். அதாவது உலகுக்கு பிவர்லியை தான் திருமணம் செய்து கொண்டேன் என நிரூபிக்க விரும்பி இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த விசித்திரமான வழக்கை விசாரித்த நீதிபதி, போனியின் கோரிக்கையை ஏற்று உயிரிழந்த பிவர்லிக்கும், போனிக்கும் திருமணம் நடந்ததற்கான சான்றிதழை வழங்கினார்.

இதையடுத்து போனி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

Utah மாகாணத்தில் இறந்தவர்களை சட்டபூர்வமாக ஓரின திருமணம் செய்து கொள்ளும் இரண்டாவது நிகழ்வு இதுவாகும் என நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...