17 வயது இளம்பெண்ணை வித்தியாசமாக கொடுமைப்படுத்திய கும்பல் கைது

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

17 வயது இளம்பெண் ஒருத்தியை கடத்தி ஒரு மாதமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒரு கும்பல் அவளை அவமானப்படுத்தும் விதத்தில் அவளது உடல் முழுவதும் மோசமான விடயங்களை பச்சை குத்தி சித்திரவதை செய்துள்ளது.

மொராக்கோவைச் சேர்ந்த அந்த பெண்ணைக் கடத்திய 13 பேர் கொண்ட அந்த கும்பல் அவளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததோடு, அவளது உடல் முழுவதும் மோசமான விடயங்களை பச்சை குத்தியும் மோசமான வார்த்தைகளால் திட்டியும் அவமானப்படுத்தியுள்ளது.

கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட அந்த பெண் விடுவிக்கப்பட்ட பிறகே சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு காரணம் மொராக்கோவின் அந்த குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொலிசார் என்றால் மிகவும் பயம்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதி ஐந்து பேரை பொலிசார் தேடி வருகின்றனர்.

அந்த பெண் எதற்காக கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டாள், பின்னர் ஏன் அவள் விடுவிக்கப்பட்டாள் என்னும் கேள்விகளுக்கான பதில்கள் இன்னும் கிடைக்காத நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...