உணவகத்தில் புகுந்து கொலைவெறித் தாக்குதல்: 2 பெண்கள் மரணம்; பலர் படுகாயம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பெல்ஜியம் நாட்டில் உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் இரண்டு பெண்கள் சம்பவயிடத்தில் கொல்லப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகராம் தொடர்பில் பிரபலமான அந்த உணவகம் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெல்ஜியத்தின் Moresnet-Chapelle பகுதியில் அமைந்துள்ள Le Ramier என்ற பிரபல உணவகத்திலேயே இந்த கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதில் இரண்டு பெண்கள், தாயார் மற்றும் மகள் என கூறப்படுகிறது, கொல்லப்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்ட நபரும் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பேசிய நகர மேயர் விம்மர், இது பயங்கரவாத தாக்குதல் அல்ல எனவும், உள்விவகாரம் மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவரது முன்னாள் காதலன் தான் தாக்குதலில் ஈடுபட்ட நபர் என சம்பவத்தை நேரில் பார்த்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து குறித்த உணவகம் மூடப்பட்டுள்ளது.

ஆயுதத்துடன் உணவகத்திற்குள் நுழைந்த அந்த நபர் திடீரென்று அந்த பெண்களை கண்மூடித்தனமாக தாக்கியதாகவும்,

அதில் ஒருவர் சம்பவயிடத்தில் கொல்லப்பட்டதாகவும், இன்னொருவர் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் இறந்ததாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...