இந்திய குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி வழங்கிய அவுஸ்திரேலியா! 8 ஆண்டுகளுக்கு பின் நீங்கியது

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அவுஸ்திரேலியா அரசு 8 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிலிருந்து குழந்தைகளை தத்தெடுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து அந்நாட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து குழந்தைகளைத் தத்தெடுக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து குழந்தைகள் கடத்தப்படுவது அவுஸ்திரேலிய அரசுக்கு தெரியவந்ததால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனங்கள்கூட குழந்தைகளை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு தத்தெடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டது.

இதனிடையே, இந்தியாவில் 2015-ஆம் ஆண்டு சிறார் நீதி சட்டம் இயற்றப்பட்டது. தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டில் தத்தெடுத்தல் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

இந்திய அரசு அவுஸ்திரேலியா அரசுடன் இரு நாடுகளிடையே தத்தெடுப்பதை மீண்டும் அனுமதிப்பது குறித்து பேசிவந்தது.

இதன் காரணமாக, இந்தியாவில் தற்போதைய நடைமுறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது. விரைவில் இந்தியாவிலிருந்து தத்தெடுப்பதற்கு அவுஸ்திரேலியா அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers