குழப்பத்தில் ஒபாமா பின்லேடன் என்று கூறிய போட்டியாளர்: வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

துருக்கியில் நடந்த மில்லியனரி எனும் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் ‘ஒபாமா பின்லேடன்’ என்று கூறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோடீஸ்வரன் நிகழ்ச்சியைப் போல துருக்கி நாட்டில் ‘Who Wants To Be A Millionarie?' என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் இவான் காஃப்மான் எனும் போட்டியாளர் கலந்து கொண்டார்.

அவரிடம் ‘யாருடைய பெயர் ஒபாமா என்று முடிகிறது?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘பின்லேடன்’ என்று முதலில் கூறிவிட்டு சிறிது நேர இடைவெளிக்குப் பின்னர் ‘பாராக் ஒபாமா’ என்று பதிலளித்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.

மேலும், இவான் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராக் ஒபாமாவை பின்தொடர்கிறார் என்று குறிப்பிட்டு பலர் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து இவான் கூறுகையில்,

‘நான் சற்றும் யோசிக்காமல் அந்த பதிலை கூறினேன். திடீரென ஒருவர் ஒபாமா என்று கூறும்போது, அனிச்சையாக பின்லேடன் என்று கூறிவிட்டேன். இதற்காக என்னை நானே மன்னிக்க மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers