கிம் ஜாங் உன் சகோதரர் கொலை வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு: குற்றவாளி யார்?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

வட கொரிய அதிபரான கிம் ஜாங் உன்னின் சகோதரர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

வட கொரிய அதிபரான கிம் ஜாங் உன்னின் சகோதரரான கிம் ஜாங் நாம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் திகதி கோலாலம்பூரில் கொல்லப்பட்டார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த Siti Aisyah என்னும் பெண்ணும் வியட்நாமைச் சேர்ந்த Doan Thi Huong என்னும் பெண்ணும் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ள அந்த பெண்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அல்லது வேறு வார்த்தைகளில் கூறினால் நீதிபதி சாட்சியங்களை ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

கிம் ஜாங் நாம் மீது அந்த பெண்கள் VX என்னும் நச்சுப்பொருளை தடவி கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதி முன்பு ஒரு பெண் கிம் ஜாங் நாம் மீது VX என்னும் நச்சுப்பொருளை தடவும் வீடியோ பதிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் இருவரின் உடலிலும் VX என்னும் நச்சுப்பொருள் இருந்தது தடயவியல் ஆய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தாங்கள் தொலைக்காட்சி ஒன்றிற்காக வேடிக்கை செய்வதாக செய்வதாக நினைத்து அந்த பொருளை தடவியதாக அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வீடியோவில் அந்தப் பெண்ணின் முகம் தெளிவாகவும் இல்லை. தங்கள் கட்சிக்காரர்கள் நிரபராதிகள் என இரு பெண்களின் வழக்கறிஞர்களும் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு வட கொரியர்கள் தப்பி ஓடி விட்டனர்.

அவர்கள் வட கொரிய அதிபருக்கு தெரிந்தவர்கள் என்றும் வட கொரிய அதிபரின் சகோதரர் கொலையில் வட கொரிய அரசின் பங்கும் இருக்கிறது என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாகும் தீர்ப்பில்தான் யார் குற்றவாளி என்பது முடிவு செய்யப்பட உள்ளதால் தீர்ப்பு குறித்து பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...