வெள்ளத்தில் மிதக்கும் தாய் மண்ணிற்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரிய வழங்கிய வள்ளல்! யார் அவர் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1542Shares
1542Shares
lankasrimarket.com

வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவிற்கு உலகம் முழுவதும் இயங்கி வரும் நிறுவனம் லுலு 26 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியது. இதனால் ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டன. இதன் காரணமாக பெரும் அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மழை மற்றும் நிலச்சரிவினால் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.இதுவரை 39 பேர் உயிர் இறந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 8,316 கோடி ரூபாய் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மத்திய அரசு 100 கோடி நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்தது. அதுமட்டுமின்றி பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவியை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு, உலகம் முழுவதும் இயங்கி வரும் நிறுவனமான லுலுவின் நிறுவன தலைவர் யூசுப் அலி, கேரளாவிற்கு நிவாரண நிதியாக 26 கோடி ரூபாயை நிவாரணமாக வழங்கி உள்ளது அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

மேலும் யூசுப்அலி கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்