ரத்த வெள்ளத்தில் சிதறி கிடந்த தங்கையின் உடல்: கதறி அழுத அண்ணன்! விசாரணையில் சிக்கிய அம்மா

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஸ்யாவில் பெற்ற மகளை, அம்மாவே கண்மூடித்தனமாக கோடாரியால் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஸ்யாவின் Chaykovsky பகுதியை சேர்ந்தவர் Tatiana Degirmendzhy (49). இவருக்கு 22 வயதில் Sertan என்ற மகனும், 18 வயதில் Yulia என்ற மகளும் உள்ளனர். வீட்டில் இருக்கும் சமயங்களில் அடிக்கடி Tatiana-விற்கும் அவரது மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மகள் மீது ஏற்பட்ட தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக, Yulia உறங்கிக்கொண்டிருக்கும்போது கோடரியால் அவரது தலைப்பகுதியில் ஓங்கி அடித்ததோடு, உடல் பாகங்களையும் தனித்தனியாக வெட்டிவீச முயற்சி செய்துள்ளார்.

பின்னர் வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சி செய்த அவர், Chaykovsky-ல் இருந்து புறப்பட்ட ரயிலில் ஏறி கிளம்பினார். இதற்கிடையில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய Sertan, வீட்டின் சுவர் பகுதிகளில் ரத்தக்கறை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் வீட்டிற்குள் சென்று Yulia அறையை திறக்கும்பொழுது, ரத்த வெள்ளத்தில் உடல் சிதறிய நிலையில் தங்கை படுக்கையில் கிடந்துள்ளார். இதனை பார்ப்பது கதறி அழுத Sertan உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், வீட்டில் சோதனை மேற்கொண்ட போது ரத்தக்கறையுடன் கோடாரி இருப்பதை கண்டறிந்துவிட்டு Tatiana-வையும் தேட ஆரம்பித்தனர்.

பின்னர் பொலிஸாரின் தீவிரமான தேடுதல் வேட்டையால், தப்பித்து செல்ல முயன்ற அவர்களுடைய அம்மாவை 30 கிமீ தூரத்தில் உள்ள Izhevsk நகரத்தில் வைத்து கைது செய்தனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறும்பொழுது, "எனக்கு இதுபோன்று இன்னும் 7 மகள்கள் இருந்தால் அவர்களையும் இப்படித்தான் கொலை செய்வேன்" என அவர் விசாரணையில் கூறியதாக தெரிவித்தனர். மேலும் பேசுகையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...