இளம்பெண்ணை துஷ்பிரயோகம் செய்து உடலை துண்டு துண்டுகளாக வெட்டிய கொடூரன்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் ஆன்லைன் மூலம் அறிமுகமான இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்த கொடூரன், கோடரியால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ள கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரஸ்யாவை சேர்ந்த Maria Konnov என்ற 16 வயது இளம்பெண்ணுக்கு ஆன்லைன் மூலம் Vladimir Sharov என்ற 18 வயது நண்பர் கிடைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு Sharov-வை சந்திப்பதற்காக Maria அவனுடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு Sharov, Maria-வை வலுக்கட்டாயமாக துஸ்பிரயோகம் செய்துவிட்டு, வெளியில் யாரிடமும் கூற கூடாது என மிரட்டியுள்ளான்.

அதற்கு பயப்டாத Maria பொலிஸாரிடம் புகார் அளிப்பேன் என கூறியதால், ஆத்திரமடைந்த அவன் உடனே Maria-வின் கைகளை கட்டி வாயில் துணியினை வைத்து கொடுமைப்படுத்தியுள்ளான்.

பின்னர் கோடாரி ஒன்றினை கொண்டு Maria-வை கொலை செய்தததோடு, அவரது உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பையில் போட்டு, Magnitogorsk நகரம் அருகே தூக்கி வீசியுள்ளார்.

இதற்கிடையில் இளம்பெண் காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், DNA சோதனையின் மூலம் Maria கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ளும்பொழுது, சம்பவம் நடைபெற்ற அன்று Sharov வீட்டிலிருந்து பெண் ஒருவர் கதறி அழும் சத்தம் கேட்டதாகவும், சிறிது நேரம் கழித்து அந்த சத்தம் நின்று விட்டதாகவும் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், Maria - Sharov ஆன்லைன் நட்பு குறித்தும், பலமுறை Sharov-வை நேரில் பார்த்துள்ளதாகவும் Maria-வின் தோழி ஒருவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து Sharov தான் குற்றவாளி என்பதை உறுதி செய்து அவனை கைது செய்து விசாரணை மேற்கொள்ளும்பொழுது, ஏற்கனவே பள்ளி மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்துள்ள வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொலிஸார் தரப்பு தெரிவிக்கையில், குற்றவாளிக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers