மகன்களுக்காக தந்தை செய்த வியக்க வைக்கும் செயல்: குவியும் பாராட்டுக்கள்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தாய்லாந்து நாட்டை சேர்ந்த தந்தை ஒருவர், அன்னையர் தினத்தன்று மகன்களுக்காக பெண் உடை அணிந்து பள்ளிக்கு சென்றுள்ள சம்பவம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் Kanchanaburi பகுதியை சேர்ந்தவர் Chatchai Parnuthai (32). இவருக்கு 5 வயதில் Ozone என்ற மகனும், 3 வயதில் Imsome என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவருடைய மனைவி பிரிந்து சென்று ஐரோப்பாவில் குடியேறி விட்டார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிமையன்று அவருடைய மகன்கள் படித்த பள்ளியில் அன்னையர் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது அனைத்து மாணவர்களின் அம்மாக்களும் பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். ஆனால் இந்த இரு சிறுவர்களுக்கு மட்டும் அம்மா இல்லாததால் மிகுந்த சோகத்துடன் தனியாக நின்றிருந்துள்ளனர்.

இதனையறிந்த Chatchai உடனடியாக தன்னுடைய மனைவியின் உடை ஒன்றினை அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்று, தாய் இல்லாத குறையை நிறைவேற்றுள்ளார். பின்னர் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் Chatchai-ன் செயலை பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...