கடலில் மூழ்கப்போகும் இந்தோனேஷிய நகரம்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தா வேகமாக நீரில் மூழ்கும் நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்தோனேஷியாவின் ஜாவா தீவிற்கு எல்லையில் அமைந்துள்ளது ஜகார்த்தா நகரம். 13 நதிகளால் சூழப்பட்டுள்ள இந்த நகரத்தில், சுமார் ஒரு கோடி பேர் வசிக்கிறார்கள். கடந்த 2013ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, இந்த நகரத்தில் இருந்து பலர் வெளியேறிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், உலக அளவில் கடலோரத்தில் இருக்கும் 136 பெரு நகரங்கள் கடலில் மூழ்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதில் ஜகார்த்தா நகரம் முதலிடத்தில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நகரில் கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், 2050ஆம் ஆண்டு ஜகார்த்தா 95 சதவிதம் வரை மூழ்கும் என்னும் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக ஆண்டுதோறும் பெய்யும் மழை, அதனால் உண்டாகும் வெள்ளமும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் ஜகார்த்தா நகரம் நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மையை இழந்ததும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers