தென்கொரிய வடகொரிய அதிபர்கள் விரைவில் மூன்றாவது முறை சந்திப்பு

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மூன்றாவது முறையாக இருவரும் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இவர்களின் முதல் சந்திப்பு ஏப்ரலில் நிகழ்ந்தது. இதை தொடர்ந்து கடந்த மே மாதத்தில் இரண்டாவது சந்திப்பும் நிகழ்ந்தது.

இந்நிலையில், இவ்விரு நாட்டு அதிபர்களுக்கு இடையே மூன்றாவது சந்திப்பு ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தையில் இருநாட்டு அதிகாரிகளுக்கும் இன்று ஈடுபட்டுள்ளனர்.

இப்பேச்சுவார்த்தையில், அதிபர்கள் சந்தித்துக்கொள்ளும் நேரம் , இடம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் செப்டம்பர் மாதம் இச்சந்திப்பு நடைபெறலாம் என முடிவுச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers