பிறந்த நாளிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போதே இளம்பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்த Eliana Ferreira Campos என்ற பெண் தன்னுடைய 24வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தன்னுடைய வீட்டில் ஒரு பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அவருடைய அழைப்பை ஏற்று வந்திருந்த நண்பர்கள் சிலருடன் வீட்டின் வெளியில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென அங்கு வந்த சில மர்ம நபர்கள் திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

வீடியோவை காண...

பின்னர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு பிறந்தநாள் விழா கொண்டாடிய Eliana தலையில் வைத்து சுட்டனர், இதில் சம்பவ இடத்திலேயே Eliana சுருண்டு விழுந்து இறந்தார்.

இதனை பார்த்து சக நண்பர்கள் அனைவரும் பயந்து ஓட, அவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் Paloma de Oliveira Guimarães (26) மற்றும் Edmundo Cristian Ferreira de Matos (18) என்ற இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 3 பேரை கைது செய்தனர். தற்போது சம்பவம் குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...