உலகின் பணக்கார இடமாக சீனாவின் மக்காவு மாறவுள்ளது! ஒரு நபரின் வருமான எத்தனை லட்சம் டொலர் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உலகின் பணக்கார இடம் என்கிற அந்தஸ்தை கத்தாரிடம் இருந்து, சூதாட்ட மையமான சீனாவின் மக்காவு தட்டிப் பறிக்கவுள்ளது.

சூதாட்ட வருவாய் அடிப்படையில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது கத்தார். சீனாவின் மக்காவு நகரில் பெருகியுள்ள சூதாட்டத்தினால் அந்த நகரம் 2023-ஆம் ஆண்டு கத்தாரை முந்தி முதலிடம் பிடிக்கும் என்று ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது.

சீனாவின் தென் பகுதியில் உள்ள மக்காவு கடந்த 20 ஆண்டுக்களுக்கு முன் சீன அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

அதிலிருந்து அங்கு சூதாட்டம் மிகவும் அதிகிரித்து வருகிறது. அந்நாட்டில் சூதாட்டம் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒரே இடம் மக்காவு ஆகும்.

கத்தாரில் ஒரு நபரின் சராசரி வருமானம் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 702 டொலர்களாக உள்ளது. சீனாவின் மக்காவு நகரில் இந்த வருமானம் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 489 டாலர்களாக இருக்கிறது.

ஆனால் சூதாட்ட மையமாக திகழும் மக்காவு நகரில் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதால் 2020ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 116 டாலர்களாகவும், ஆனால் அதே நேரத்தில் கத்தாரில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 151 டாலர்களாக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers