நடுவானில் மாயமான பயணிகள் விமானம்: தேடுதல் பணிகள் தீவிரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் 9 பேருடன் புறப்பட்ட குட்டிரக விமானம் ஒன்று மாயமான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு இந்தோனேசியாவின் மலைப்பகுதியில் அமைந்துள்ள பப்புவா மாகாணத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகள் அனைத்தும் திடீரென்று துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் Okatem கிராமப் பகுதியில் உள்ள மக்கள் பெரும் சத்தம் ஒன்று கேட்டதாகவும், அது விமானமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதை அடுத்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சந்தேகம் இருக்கும் பகுதிகளில் தேடுதல் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.

மாயமான விமானத்தில் ஒரு குழந்தை உள்ளிட்ட 7 பயணிகளும் 2 விமானிகளும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதேபோன்ற குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பயணிகள் கொல்லப்பட்டனர்.

இந்தோனேசியாவின் பப்புவா பகுதியானது விமானிகளுக்கு சவாலான பகுதியாகும். இதனால் பெரும்பாலான விமானிகள் குறித்த பகுதியை தவிர்ப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers