13 வயது சிறுமியை கடத்தி பாலியல் அடிமையாக பயன்படுத்திய மத குரு: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் 13 வயது சிறுமியை கடத்திச் சென்று மத குரு ஒருவர் பாலியல் அடிமையாக வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் கைதாகியுள்ள மத குரு தற்போது சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் அமைந்துள்ள குகை ஒன்றில் ஞாயிறன்று நிர்வாண நிலையில் இளம்பெண் ஒருவரை மீட்டுள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமது பெற்றோருடன் அப்பகுதியில் செயல்பட்டுவரும் மத குருவிடம் சென்றதாகவும், சில மாதங்களுக்கு பின்னர் அப்போது 13 வயதேயான தமது உடலில் இளம் காதலர் ஒருவரின் ஆவி புகுந்துள்ளதாகவும், சிறப்பு பூஜை நடத்தினால் அந்த ஆவியை துரத்தலாம் எனவும் கூறியுள்ளார்.

இதனால் அவரது பெற்றோர் தொடர்ந்து சிறுமியை அழைத்துக் கொண்டு அந்த மத குருவிடம் சென்றுள்ளனர்.

ஆனால் சிறுமி மீது கொண்ட பாலியல் இச்சை காரணமாகவே, சிறுமி மீது ஆவி புகுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து சில வாரங்களில் குறித்த சிறுமிக்கு சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி குகை ஒன்றில் தனியாக தங்க வைத்துள்ளார்.

அதன் பின்னர் சிறுமி வெளி உலகம் காணவிலை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குகையை விட்டு வெளியேறினால் அந்த ஆவியானது கடுமையான தண்டனை வழங்கும் எனவும் அச்சுறுத்தி வந்துள்ளார்.

மட்டுமின்றி சிறப்பு பூஜை எனக் கூறி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தி வந்துள்ளார்.

ஆனால் குறித்த சிறுமி 18 வயது எட்டும் வரை தாம் பாலியல் உறவு எதும் வைத்துக் கொள்ளவில்லை என பொலிசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அந்த மத குருவுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...