ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை சுட்டுக் கொன்ற இளைஞர்: பதறவைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவான இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த படுகொலை தொடர்பில் கைதான இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை கூட்டப்படுகொலைக்கான காரணம் வெளியாகவில்லை எனவும் உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

அல்பேனியா தலைநகர் டிரானா நகரில் இருந்து மார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெசுலஜ் கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதான ரித்வான் சைகாஜ்.

இவர் நேற்று தனது வீட்டில் இருந்த குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளார்.

அதன்பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த திடீர் தாக்குதலில் அவர்கள் 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற பொலிசார், 8 பேரின் உடல்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டனர்.

இந்த நிலையில் தலைமறைவாகியிருந்த சைகாஜ் காவல்துறையின் பிடியில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் குறித்த கொலைகள் தொடர்பான காரணம் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் உள்பட 8 பேரை சுட்டுக் கொன்றது அல்பேனியாவில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers