இந்தோனேஷியாவை சூறையாடிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 384 ஆக உயர்வு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு தற்போது வரை 384 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால், 100க்கும் மேற்பட்ட சிறு சிறு நில அதிர்வுகளும் ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கம் பாலி தீவிலும் உணரப்பட்டது. மேலும், 82 பேர் இந்த நிலநடுக்கத்திற்கு பலியாகினர். அத்துடன் பல குடியிருப்பு பகுதிகள், கட்டிடங்கள், வளாகங்கள் இடிந்து விழுந்தன.

இதனால் சுமார் 3.87 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். அதனைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுவரை 13 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

AFP

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers