சீனப்பெருஞ்சுவர் எங்குள்ளது? மில்லியனர் நிகழ்ச்சியில் குழம்பிய பெண் போட்டியாளர்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

துருக்கி நாட்டில் நடைபெற்று வரும் மில்லியனர் நிகழ்ச்சியில் சீன பெருஞ்சுவர் எங்குள்ளது என்ற கேள்விக்கு, பெண் போட்டியாளர் இரண்டு Lifeline-களை பயன்படுத்தியதால் ட்விட்டரில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

துருக்கி நாட்டில் மில்லியனராக யார் விரும்புகிறீர்கள்? என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், சூ ஆய்ஹான்(26) என்ற பெண் போட்டியாளர் கலந்து கொண்டார். இஸ்தான்புல் நகரைச் சேர்ந்த இவர் பொருளாதார பட்டப்படிப்பினை படித்தவர் ஆவார்.

இவரிடம் சீன பெருஞ்சுவர் எங்குள்ளது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீனா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான் என நான்கு விடைகள் தரப்பட்டன.

ஆனால், சற்று திகைத்த ஆய்ஹான் தனக்கு விடை தெரியும், ஆனால் அதனை உறுதிபடுத்திக் கொள்ள பார்வையாளர்களின் Lifeline-யை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, 51 சதவிதம் பேர் சீனா என பதில் அளித்தனர். 4யில் ஒரு பங்கினர் இந்தியா என தெரிவித்தனர்.

இதனால் சற்று குழம்பிய ஆய்ஹான், இரண்டாவது Lifeline-ஐயும் பயன்படுத்த முடிவு செய்து, தனது நண்பரிடம் தொலைபேசியில் பேசி சீனா தான் பதில் என்பதை உறுதிபடுத்திக் கொண்டார்.

இதனால், அவர் போட்டியில் தொடர்ந்து விளையாடினார். இந்நிலையில், ஒரு எளிய கேள்விக்கு பதிலளிக்க 2 முறை Lifeline-களை ஆய்ஹான் பயன்படுத்தியதை ட்விட்டரில் பலரும் விமர்சித்தனர்.

ஆனால் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எப்பொழுது தேவையோ அப்பொழுது எனது Lifeline-களை பயன்படுத்துவேன்’ என தெரிவித்தார். எனினும், அதற்கு அடுத்து கேட்கப்பட்ட புகழ் பெற்ற துருக்கி பாடலின் இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு தவறான விடையளித்ததால், ஆய்ஹான் போட்டியில் இருந்து வெளியேறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்