தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு குரேஷியா கால்பந்தாட்ட கூட்டமைப்பு அனுப்பி வைக்கும் பரிசு என்ன தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு குரேஷியா கால்பந்தாட்ட கூட்டமைப்பு தங்கள் நாட்டு அணியின் ஜெர்சிகளை அனுப்பி வைத்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10கி.மீற்றர் நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும்.

தாய்லாந்து மியான்மர் எல்லையில் இந்தக் குகை அமைந்துள்ளது. இந்த மாகாணத்தைச் சேர்ந்த வைல்டு போர் எனும் 11 வயது முதல் 16 வயது கொண்ட சிறுவர்கள் கால்பந்து அணி கடந்த ஜூன் 23-ஆம் திகதி இந்தக் குகைக்கு சென்றனர்.

அப்போது திடீரென்று குகைக்குள் இருந்த தண்ணீருக்குள் சிக்கிய சிறுவர்கள் வெளியில் வர முடியாமல் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த சிறுவர்களுக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் உடன் சென்றனர். அப்போது அங்கு பெய்த கடுமையான மழை காரணமாக குகையில் சிக்கிக் கொண்டனர். பின்னர் 18 நாட்கள் போராட்டங்களுக்கு பிறகு அனைவரும் மீட்கப்பட்டனர்.

இந்த செய்தி உலகம் முழுவதிலும் தீயாய் பரவியது. அதுமட்டுமின்றி சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று உலகக்கோப்பை போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியா அணி தோல்வியை சந்தித்தது.

இருப்பினும் இறுதிப் போட்டி வரைக்கு தகுதி பெற்ற குரேஷியா அணியை பலரும் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து தற்போது குரேஷியா கால்பந்தாட்ட கூட்டமைப்பு தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களுக்கு தங்கள் நாட்டு வீரர்கள் கால்பந்தாட்ட போட்டியில் அணிந்து விளையாடும் டீ சர்ட்டை பரிசாக அனுப்பியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers