துரோகம் செய்த கணவனின் ஆடி காரை அடித்து நொறுக்கிய மனைவி: வெளியான வீடியோ காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் தன்னை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் சுற்றித் திரிந்த கணவரின் ஆடி காரை மனைவி அடித்து நொறுக்கும் காட்சி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் அதை உறுதி செய்வதற்காக கணவனை பின் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

அப்போது கணவன், வேறொரு பெண்ணுடன் தன்னுடைய ஆடி காரில் சென்றுள்ளார்.

இதைக் கண்ட அவரது மனைவி ஆத்திரத்தில், காரின் பானட்டில் ஏறி அமர்ந்து, சுத்தியலால் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து காரை ஓட்டிச் சென்ற கணவன் ஒரு கட்டத்தில் காரை நிறுத்தியே தீரவேண்டிய நிலையில் மனைவியின் கையால் சரமாரியாக அடி வாங்கும் நிலையும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கார் கதவைத் திறந்த மனைவி அதுவரை எதுவுமே நடவாதது போல காருக்குள் வெகு கூலாக அமர்ந்திருந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்தக் காட்சிகள் அப்பகுதியைக் கடந்து சென்றவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers