சொந்த அண்ணனால் சீரழிக்கப்பட்டு கர்ப்பமாகிய தங்கை! சிறையில் அடைக்கப்பட்ட 15 வயது சிறுமி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தோனிசியாவில் சொந்த அண்ணனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி, தன்னுடைய கருவை கலைத்ததால், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனிசியாவின் Sumatra பகுதியில் உள்ள Muara Bulian மாவட்டத்தில் இருக்கும் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை பாலியல் துஷ்பிரயோகம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது 15 வயது சிறுமி ஒருவர் கரு கலைப்பு செய்ததால், அவர் மீது குழந்தை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று 15 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததால், சிறுமியின் அண்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், கடந்த ஜுன் மாதம் 15 வயது சிறுமி மற்றும் சிறுமியின் மூத்த அண்ணன் 17 வயதுள்ள நபர் என இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

அப்போது சொந்த தங்கை என்று கூட பாராமல் அந்த நபர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுமார் 8 முறை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளான்.

இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். அதை அந்த சிறுமி தன் தாயாரின் உதவியுடன் கலைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தோனிசியாவில் கருகலைப்பு செய்வது மிகப் பெரிய குற்றமாகும், கருகலைப்பு செய்தால் அந்த பெண்ணின் உயிருக்கே ஆபத்து என்பதால் இது போன்ற சட்டம் அங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதை அந்த சிறுமி மீறிவிட்ட காரணத்தினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக சிறுமியின் சகோதரருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கருகலைப்பு செய்வதற்கு உதவியாக இருந்த தாயாருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers