அகதியை தண்ணீரில் தவிக்கவிட்டுச் சென்ற லிபிய கடலோரக் காவல்படை: மீட்ட தொண்டு நிறுவனம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கேமரூனைச் சேர்ந்த அகதிகளை தண்ணீரில் தவிக்கவிட்டதோடு அவர்களது உயிர் காக்கும் ரப்பர் படகின் காற்றையும் பிடுங்கி விட்டு சென்றதாக தொண்டு நிறுவனம் ஒன்று குற்றம் சாட்டியுள்ள நிலையில் அந்த குற்றச்சாட்டை லிபிய கடலோரக் காவல் படையினர் மறுத்துள்ளனர்.

ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவனின் உடல்களுடன் ஒரு பெண்ணையும் அந்த தொண்டு நிறுவனத்தின் மீட்பு படகுகள் ஸ்பெயினுக்கு கொண்டு வந்தன. உயிருடன் மீட்கப்பட்ட கேமரூனைச் சேர்ந்த அந்த 40 வயது பெண்ணின் பெயர் Josepha.

மீட்கப்பட்ட Josepha உடல் ரீதியாக நார்மலாகிவிட்டதாகவும் என்றாலும் அவர் அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதால் அவருக்கு மருத்துவ மற்றும் மன நல சிகிச்சை கொடுக்கப்பட இருப்பதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் லிபிய கடலோரக் காவல் படையினர் தாங்கள் அகதிகளை தண்ணீரில் தவிக்க விட்டு சென்றதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளனர்.

Ayoub Qasim என்னும் லிபிய கடற்படையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் அந்த தொண்டு நிறுவனம் கூறுவது பற்றி தங்களுக்கு தெரியாது எனவும் வேறு ஏதோ படகைப் பற்றி அவர்கள் தவறுதலாகக் கூறியிருக்கலாம் என்றும், ஒரு உயிரைக் காப்பாற்றினால் கூட தாங்கள் அதை பெரிதாகக் கொண்டாடுபவர்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...