தந்தையால் சீரழிக்கப்பட்ட இளம்பெண்ணின் கண்ணீர் கதை! தண்டனை என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அயர்லாந்தில் நீண்ட 13 ஆண்டுகள் தந்தையால் சீரழிக்கப்பட்டதை துணிச்சலுடன் வெளியிட்டு இளம் தாயார் ஒருவர் தண்டனையும் பெற்றுத் தந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தின் மாயோ கவுண்டி பகுதியில் குடியிருக்கும் 33 வயது இளம் தாயார் ஒருவர் தமது 3 வயது முதல் தந்தையால் தாம் அனுபவித்த வேதனைகளை நீதிமன்றத்தில் பட்டியலிட்டுள்ளார்.

நீண்ட 13 ஆண்டு காலமாக தமது அப்பாவித்தனம், குழந்தை பருவம் மட்டுமல்ல குரலைக் கூட இழக்க வேண்டிய நிலைக்கு தமது தந்தையால் ஆளானேன் என தற்போது 33 வயதாகும் சோபியா தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 61 வயது ஜான் மர்ஃபி என்பவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் துணிச்சலுடன் வழக்குத் தொடுத்த இளம் தாயார் சோபியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

எனது நினைவு தெரிந்து அவரால் துன்புறுத்தப்படாத ஒரு நாட்கள் கூட இல்லை என எண்ணும்போது வாழ்க்கையே வெறுமையாக உள்ளது என கூறும் சோபியா, தனது மதிப்பு, தனியுரிமை, ஆற்றல், நேரம், நம்பிக்கை, அப்பாவித்தனம், குழந்தை பருவம், கல்வி, இளமைக்காலம், சாதாரண வாழ்க்கை என அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டிய சோபியா, பட்டப்பகல் மட்டுமல்ல, இரவிலும் கொடுமைகள் தொடர்ந்தது என்றார்.

முன்னாள் பாதுகாப்புத்துறை அதிகாரியான ஜான் மர்ஃபி கடந்த 1988 முதல் 2001 வரை தமது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார்.

கடைசியாக 2010 ஆம் ஆண்டு துன்புறுத்தியதாக அவரே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் மீது நிரூபணமான பாலியல் வழக்கு தொடர்பில் தற்போது 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவரும் மர்ஃபி, தொடர்ந்து மேலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க உள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...