காதலனை 25 முறை கத்தியால் சரமாரியாக தாக்கிய மொடல் அழகி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கென்யாவில் தமது காதலரை கத்தியால் 25 முறை சரமாரியாக தாக்கி கொலை செய்த மொடல் அழகிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கென்யாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு காதலனை கத்தியால் தாக்கி கொலை செய்த இளம்பெண் Ruth Kamande, சிறையில் விசாரணை கைதியாக இருந்தபோதே மொடல் அழகியாக தெரிவானவர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்ததை அடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமது காதலனின் மொபைல் தகவலை சோதனையிட்டது, ஈவு இரக்கமின்றி அவரை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்தது என மன்னித்து வெளியே விட்டுவிட முடியாத அளவுக்கு அவர் நடந்துகொண்டுள்ளார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற ஒருவருக்கு மரண தண்டனையைவிட குறைவான தண்டனை வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

வாழ்நாள் சிறை தண்டனை அளிப்பதற்கு பதிலாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, கென்யாவின் வளர்ச்சி விகித்தத்தை கடுமையாக பாதிக்கும் என மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் குற்றவாளி Ruth Kamande-வுகு வழங்கப்பட்டுள்ள தண்டனையானது, அவரது குற்றச்செயல்களுக்கு பொருத்தமானதே என கொலை செய்யப்பட்ட 24 வயது Farid Mohammed என்ற இளைஞரின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கையின் முதற்படியை எடுத்த வைத்த தமது உறவினரின் உயிரை கொடூரமாக பறித்ததன் பெயர் காதலா எனவும் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பானது குறித்த இளம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனையை கொடூரமானது, மனிதாபிமானமற்றது மேலும் காலாவதியானது என்று குறிப்பிட்டுள்ளது.

கென்யாவில் கடந்த 1987 முதல் மரண தண்டனை விதிக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers