கீழே விழுந்து நொறுங்கிய விமானம்! கடைசி நிமிட காட்சியை படம் பிடித்த பயணியின் திகில் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் புறப்பட்ட சில மணி நேரங்களிலே விமானத்தின் இறக்கையில் தீப்பிடித்து எரிந்தது தொடர்பான காட்சியை விமானத்தின் உள்ளே இருந்த பயணி வீடியோவாக எடுத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் ஒண்டர்பூம் விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் புறப்பட்ட சிறிய ரக உள்நாட்டு விமானத்தின் இறக்கையில் தீடீரென்று தீப்பிடித்ததால், அதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு சிலர் பயத்தில் அலறினர். இருப்பினும் விமானிகள் பதட்டமில்லாமல் விமானத்தை கீழ் நோக்கி தரை இறக்கினார்கள்.

அப்போது விமானமானது பால் பண்ணை வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதனால் விமானத்தில் இருந்த 19 பேர் காயமடைந்ததாக முதல் கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விமானத்தின் உள்ளே இருந்த பயணி ஒருவர் விமானம் தீப்பிடித்ததை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த விபத்தில் விமானி மற்றும் தரையில் இருந்த தொழிலாளர் என 2 பேர் பலியாகியுள்ளதாகவும் , 2 பைலட்டுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...