தந்தையின் சடலத்துடன் செல்பி: மொடல் அழகியின் மோசமான செயல்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சமூகவலைத்தளத்தில் அதிக லைக்குகளுக்கு ஆசைப்பட்டு, மாடல் அழகி ஒருவர் இறந்த தந்தையின் உடல் முன்பு செல்பி எடுத்து, அதனை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதால், ரசிகர்கள் பலரிடமும் வாங்கிக்கட்டி கொண்டிருக்கிறார்.

Serbia நாட்டை சேர்ந்த Jelica Ljubicic என்ற இன்ஸ்டாகிராம் மாடல் அழகி, மருத்துவமனையில் இறந்த கிடந்த தந்து தந்தையின் உடல் முன்பு செல்பி எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், உடனடியாக அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.

அந்த பதிவில், எங்களால் முடிந்த வரை காப்பாற்ற முயற்சி செய்தோம். ஆனால் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது நமது கையில் இல்லை. 67 வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.

எல்லாவற்றிர்க்கும் உங்களுக்கு நன்றி. ஒரு மகளாக என்னை நல்வழியில் நடத்தியதற்கு. உங்களது ஆன்மா சாந்தியடைய நாங்கள் பிராத்திக்கிறோம். நீங்கள் எப்பொழுதும் எங்களுடைய இதயத்தில் இருப்பீர்கள் என பதிவிட்டிருந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், "மனநோயாளிகள் மட்டுமே இதுபோன்ற பதிவுகளை வெளியிடுவார்" என பதிவிட்டிருந்தார்.

அதேபோன்று மற்றும் ஒரு நபர், "அவர் புகைப்படம் எடுப்பதில் இருந்தே தெரிகிறது. எந்த அளவிற்கு அவரது தந்தையை பாதுகாத்திருப்பார் என்பது" என பதிவிருந்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்