பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்: 10 பேர் கொண்ட சக மாணவ கும்பல் தலைமறைவு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பாடசாலை மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று 10 பேர் கொண்ட சக மாணவ கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கொடூர சம்பவத்தின்போது சுயநினைவை இழந்த மாணவியை கண்டு பயந்த சிறுவர்கள் சம்பவம் நடந்த கரும்பு தோட்டத்திலேயே விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

பீகாரின் சம்பரான் மாவட்டத்தில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பாடசாலை முடிந்து குடியிருப்பு தனியாக சென்ற மாணவியை 10 பேர் கொண்ட சக மாணவ சிறுவர்கள் கும்பல் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அருகாமையில் உள்ள கரும்பு தோட்டத்தில் வைத்து கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தால் சுயநினைவை இழந்த மாணவியை அந்த அரக்க கும்பல் கரும்பு தோட்டத்திலேயே விட்டுவிட்டு மாயமாகியுள்ளது.

இந்த நிலையில் பாடசாலை செல்ல மறுப்பு தெரிவித்த மாணவியிடம் காரணம் கேட்ட பெற்றோர் அதிர்ந்து போயினர்.

மேலும், தம்மை துஷ்பிரயோகம் செய்தவர்களின் பெயரை வெளியிட்டால் இன்னும் கொடூரமாக நடந்துகொள்வதாக அவர்கள் மிரட்டியதாகவும் குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்த மாணவியின் பெற்றோர் முறைப்படி புகாரும் அளித்துள்ளனர்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் ஒரு மாணவனை மட்டும் கைது செய்துள்ள பொலிசார், எஞ்சிய மாணவர்களையும் உடனடியாக கைது செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்