வடகொரிய ஜனாதிபதியின் கொடூர முகம்: வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரியாவில் உள்ள பொதுமக்களில் பத்தில் ஒருவர் கட்டாயமாக கொத்தடிமைகளாக பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் 2.6 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை சிறார்களும் இதில் விதிவிலக்கல்ல எனவும் கூறப்படுகிறது.

கொத்தடிமைகள் தொடர்பில் சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொண்ட அமைப்பு ஒன்று வடகொரியாவில் அடிமை வேலை செய்யும் சிறார்களின் எண்ணிக்கை மிக அதிகம் என குறிப்பிட்டுள்ளது.

மட்டுமின்றி துவக்கப்பள்ளி மாணவர்கள் ஆண்டுக்கு இரண்டு மாதம் கட்டாயம் கடின வேலைகளை மேற்கொள்ளும்படி அமர்த்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

சில மாணவர்களை விவசாய நிலத்தில் பணியெடுக்க அமர்த்தப்படுகின்றனர், சிலர் ரயில் தண்டவாளத்தில் சிதறிக்கிடக்கும் நிலக்கரியை சேகரிக்க பணிகப்படுகின்றனர்.

மட்டுமின்றி குறித்த இரண்டு மாத கட்டாய பணியில் ஈடுபடுத்தப்படும் அந்த மாணவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும், அந்த பணத்தை குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஊதியம் தொடர்பில் கேள்வி கேட்கும் மாணவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வடகொரியாவில் இருந்து வெளியேறிய சுமார் 50 குடும்பங்களை சந்தித்த தனியார் அமைப்பு, இந்த விவகாரத்தில் வடகொரியாவில் நடைபெறும் கொத்தடிமைத்தனத்தை அரசே முன்னெடுத்து நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்