மனைவியுடன் சேர்ந்து பெற்ற தாய்க்கு புல்லை சாப்பிடகொடுத்து கொடுமைப்படுத்திய மகன்: வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சீனாவில் தனது மனைவியுடன் இணைந்து பெற்ற தாய்க்கு புல்லை சாப்பிடுமாறு மகன் கொடுமைப்படுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்ததையடுத்து அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

Dongjia என்ற கிராமத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில், Liang என்ற நபர் தனது மனைவியுடன், தாயார் வாக்குவாதம் செய்த காரணத்தால், தனது தாயை அடித்து உதைத்து புல்லை சாப்பிடுமாறு துன்புறுத்தியுள்ளார்.

இதற்கு இவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த சம்பவத்தை எதிர் வீட்டில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டதையடுத்து, இது வைரலானது.

இதனைப்பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை பார்த்த பொலிசாரும், அந்த நபரை கூப்பிட்டு எச்சரித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த நபர், தான் இதுபோன்று தவறுகளை இனி செய்யமாட்டேன் என்று கூறி பொதுமக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்