தங்கத்தை விட விலை உயர்ந்த 'இமயமலை வயாகரா' பற்றி தெரியுமா?

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

உலகிலேயே அதிக விலை உயர்ந்த பாரம்பரிய மருத்துவ குணம் வாய்ந்த காளான்தான் யர்சாகும்பா என்று அழைக்கப்படுகிறது.

இமயமலையிலுள்ள வயாகரா என்று இதனை கூறுகின்றனர், நேபாளம், இந்தியா, பூடான் திபெத்திய தீபகற்பத்தில் மட்டும் இதை காண முடியும்.

அதாவது மண்ணிலுள்ள ஒரு காளான் வெட்டுக்கிளியை கொல்லும்போது யர்சாகும்பா உருவாகிறது.

3000 முதல் 5000 வரையான மீட்டர் உயரத்தில் வளரும் இந்த காளானை தேடி, ஆயிரக்கணக்கான நேபாள மக்கள் இமயமலையின் உயரமான இடங்களில் சில மாதங்கள் கழிக்கின்றனர்.

பாலுணர்வை தூண்டும் குணங்களுக்கு அப்பாற்பட்டு, ஆஸ்துமா முதல் புற்றுநோய் வரை பல நோய்களை இந்த காளான் குணமாக்க முடியும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோவுக்கு ஒரு லட்சம் டொலர் வரை விற்பனை செய்யப்படுகிது, அதாவது ஒவ்வொன்றும் 3.50 முதல் 4.50 டொலர் வரை மதிப்புக்கு உரியது.

சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கொரியா, மியான்மர், தாய்லாந்து போன்ற சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் அதிக அறுவடை மற்றும் பருவகால மாற்றத்தால் இதன் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

- BBC - Tamil

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்