வானில் பறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்: இருவர் பலி... பதறவைக்கும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தென்னாபிரிக்க உள்நாட்டு விமானத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக அதன் இறக்கைகள் தீ பிடித்து எரிந்ததில் இருவர் பலியாகியுள்ளனர்.

சிவி-340 உள்நாட்டு விமானம் புறப்பட்டு சென்ற நிலையில் கிளம்பிய உடனேயே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அதாவது விமானத்தின் ஒரு பக்க இறக்கை தீ பிடித்து எரிந்த நிலையில் உள்ளிருந்த பயணிகள் பதறியுள்ளார்கள்.

இதையடுத்து விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக இறக்கினார்கள். ஆனாலும் உள்ளே இருந்த பயணிகள் பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த விபத்தில் 2 பேர் பலியானதாகவும், 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் அறிக்கை வெளியாகியுள்ளது.

இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்