பயமாக இருந்தது.. நாங்கள் பிழைத்ததே அதிசயம்: தாய்லாந்து சிறுவர்கள் உருக்கம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும், தாங்கள் மீண்டதே பெரிய அதிசயம் என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டில் உள்ள தி தம் லுஅங் எனும் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் ஒரு துணை பயிற்சியாளர் ஆகியோர் இரண்டு வார போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு நிமோனியா பாதிப்பு இருந்ததுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் தற்போது நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், ‘’Thailand Moves Forward'' என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குறித்த சிறுவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில்,

‘குகைக்குள் பயமாக இருந்தது. நாங்கள் மீள்வோம் என்று நினைக்கவே இல்லை. எல்லாம் பெரிய அதிசயம் போல நடந்து இருக்கிறது.

நாங்கள் இப்போது உங்கள் முன் பேசுவதே ஆச்சரியமான விடயம் தான். எங்கள் உயிரை காப்பற்ற போராடிய எல்லோருக்கும் நன்றிகள்’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்