எதிபார்ப்புக்களை புஸ்வாணமாக்கிய டிரம்ப் புடின் சந்திப்பு

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு முதல் கட்டத்திலேயே எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ரஷ்ய ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் 12 பேரின் தலையீடு இருப்பதாக அமெரிக்க நீதித்துறை குறிப்பிட்டிருந்ததால் டிரம்ப் புடின் சந்திப்பில் பூகம்பம் வெடிக்கும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதற்காக அமெரிக்காவைத்தான் குற்றம் சாட்டினாரேயொழிய ரஷ்யாவை ஒரு வார்த்தைகூட கடிந்து கூறவில்லை.

இன்று காலை பின்லாந்தின் Helsinkiயில் நடைபெற்ற சந்திப்பின்போது ரஷ்யாவுடன் ஒரு அசாதாரண உறவை எதிர்பார்ப்பதாக கூறிய டிரம்ப் புடினுடன் கை குலுக்கினார்.

ரஷ்யாவுடன் நட்பு பாரட்டுவது நல்ல விடயம், அது மோசமான விடயம் அல்ல என்றார் டிரம்ப்.

பதிலுக்கு, உண்மையான விதத்தில் பேசுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று புடினும் தெரிவித்தார்.

சிறந்த முறையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தியதற்காக ரஷ்யாவைப் பாராட்டிய டிரம்ப், நாம் பேசிக்கொள்ள நிறைய நல்ல விடயங்கள் உள்ளன என்று கூறினார்.

நல்ல வாய்ப்புகள் கிடைத்தன என்றாலும், இரண்டு நாடுகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல நட்பு கொள்ளவில்லை என்றார் அவர்.

ராணுவம் முதல் சீனாவுக்கு ஏவுகணைகள் கொடுப்பது வரை பல விடயங்கள் குறித்து பேச இருப்பதாகத் தெரிவித்த டிரம்ப் தங்கள் இருவருக்கும் பொதுவான நண்பரான சீன அதிபர் ஸி குறித்தும் கொஞ்சம் பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒரு தீர்மானத்தோடுதான் வந்திருப்பார் போலும் டிரம்ப், அவர் பலமாக புடினுடன் கை குலுக்கும்போது புடினோ அவரது நாற்காலியை பலமாகப் பிடித்துக் கொண்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...